உலகின் அதிவேக ரயில் அறிமுகம்


Rain in China
மணிக்கு 416.6 கி. மீ. வேகத்தில் பறக்கும் அதிவேக ரயிலை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது.ஏற்கெனவே பீஜிங் தியான்ஷின் நகரங்களுக்கிடையே அதிவேக ரயிலை சீனா இயக்கி வந்தது. கடந்த 2008ம் ஆண்டு ஜூன் 24ம் திகதி இந்த ரயில் இயக்கப்பட்டது. மணிக்கு 394.3 கி. மீற்றர் வேகத்தில் இயக்கப்படட இந்த ரயில்தான் உலகின் அதிவேக ரயில் என்று புகழப்பட்டது. தற்போது அதை விட அதிக வேகமாக இயங்கக் கூடிய ரயிலை சீனா உருவாக்கியுள்ளது.
இந்த ரயில் மூலம் ஷங்காய் – ஹாங்ஹீ நகரங்களுக்கு இடையே பரிசோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அப்போது மணிக்கு 416.6 கி. மீட்டர் மின்னல் வேகத்தில் பறந்து சாதனை படைத்தது.சோதனை ஓட்டத்தின் போது இந்த ரயில் மணிக்கு 350 கி. மீட்டர் வேகத்தில் செல்லும் அளவு வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் இது ஷங்காய் – ஹாங்ஹீ நகரங்களுக்கு இடையே 202 கி. மீட்டர் தூரத்தை நாற்பதே நிமிடங்களில் கடந்துவிட்டது. இதற்கு முன்பு இந்த தூரத்தை ரயில்கள் 2 மணி நேரத்தில் கடந்து சென்றன. தற்போது மிகக் குறைந்த நேரத்தில் சென்றதன் மூலம் உலகிலேயே அதிவேக விரைவு ரயில் என்ற பெருமையை இது பெற்றுள்ளது.
இதன் மூலம் நவீன ரயல்வே தொழில்நுட்பத்தை சீனா பெற்றுவிட்டது நிரூபணமாகியுள்ளது என்று சீன ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது. விரைவில் பயணிகளின் பயன்பாட்டுக்காக இது கொண்டுவரப்படுகிறது.

Comments

Popular posts from this blog

சாளுக்கியர்களின் பேரரசு

பாண்டியன் நெடுஞ்செழியன்

உடல் நோய்க்கான அறிகுறிகளும் அதன் நிவர்த்தியும்