சாளுக்கியர்களின் பேரரசு இராஷ்டிரகூடர் இராஷ்டிரகூடர் ( கன்னடம் ) கிபி 6 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட அரச மரபினர் ஆவர் . 7 ஆம் நூற்றாண்டில் கிடைத்த நிலக் கொடை குறித்த செம்பு தகடே அவர்களின் ஆட்சியில் நமக்கு கிடைத்த முதல் ஆவணமாகும் . இது மத்தியப்பிரதேசத்தின் மால்வா பகுதியில் உள்ள மான்பூர் என்னும் இடத்தில் கிடைத்தது . அச்சல்பூர் ( தற்கால மராட்டியத்தின் எலிச்சப்பூர் ) கனோஞ் அரசர் பற்றியும் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன . இராஷ்டிரகூடர்கள் எங்கிருந்து வந்தார்கள் அவர்கள் மொழி என்ன என்று பல சர்ச்சைகள் உள்ளது . எலிச்சப்பூர் அரசு பாதமியை தலைநகராகக் கொண்டு ஆண்ட சாளுக்கியர்களின் பாதுகாப்பில் இருந்த ஒன்றாகும் . அப்போது எலிச்சிப்பூரை ஆண்டது தந்திதுர்கா ஆவார் . அவர் சாளுக்கியன் இரண்டாம் கீர்த்திவர்மனை முறியடித்து தற்கால கர்நாடகவிலுள்ள குல்பர்கா பகுதியில் பேரரசை நிறுவினார் . அவரின் மரபில் வந்தவர்கள் மன்யக்கேடா இராஷ்டிரகூடர்கள் எனப்பட்டனர் . தென் இந்தியாவில் சக்திமிக்க அரசாக கிபி 753 இல் உருவாகினர் . அதே சமயத்தில் வங்காளத்தின் பாலப் பேரரசும் மால்வாவின் பிரதிதாரா பேரரச...
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவன், தான் செய்த தலையாலங்கானத்துப் போரினால் சிறப்படைந்தவன். இவன் போருக்குச் செல்லும் போது, சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியைத் தன் காலில் இருந்து கழட்டவில்லை என்பதை வைத்து இவன் மிகச்சிறு வயதிலேயே போருக்குச் சென்றான் எனலாம். காலம்: பொதுவாக சங்ககால வேந்தர்களின் காலக்கணிப்புகளில் பல கருத்து வேறுபாடுகள் காணப்படினும் இம்மன்னனின் காலத்தை அறிஞர்கள் இரண்டு வகையாக கணிக்கின்றனர். ஒன்று இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தம்பியான வெற்றிவேற் செழியன் மகன் என்பது ஒரு கருத்து. மற்றொன்று இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவனுக்கு முன்னோன் என்ற கருத்து. இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக "இளைய ராயினும் பகையரசு கடியுஞ் செருமாண் தென்னர் குலமுத லாகலின்" என்ற ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் புகழும் சிலம்பின் வரியை எடுத்துக்காட்டி இளமையிலேயே பகைவரை பொருது வென்ற பாண்டிய மன்னன் தல...
உடல் நோய்க்கான அறிகுறிகளும் அதன் நிவர்த்தியும் கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி ? சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது . சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை qற்றும் வேலையைச் செய்பவை . அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால் , உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும் . இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும் . டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும் . மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும் . கண் இமைகளில் வலி .. என்ன வியாதி ? அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம் . மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது . டிப்ஸ் : போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும் . அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் . கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி ? அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது . இந்த ஸ...
Comments