தமிழ் தேதியிலிருந்து ஆங்கில தேதியை கணக்கிடுவது எப்படி?

ஆங்கில தேதியைப் பயன்படுத்தும் முறை எங்கும் நீக்கமற நிறைந்து விட்டது. அதை தவிர்க்கவும் முடியாது, பயன்படுத்துவதில் தவறும் இல்லை. 
ஆனால் இன்றும் தமிழ் தேதியை வெளியில் பயன்படுத்துகிறோமோ இல்லையோ, இல்லங்களில்
பயன்படுத்திக் கொண்டுதான் இருக்கிறோம்.  இந்து பண்டிகைகள், திருமண தேதி இவற்றை தமிழில் குறிக்கும் பழக்கம் தொன்றுதொட்டு பழக்கத்தில் உள்ளது.  என் அம்மாவுக்கு என் பிறந்த தேதி ஆங்கிலத்தில் சரியாகத் தெரியாது, தமிழ் தேதியை உடனே சொல்லி விடுவார்.

நம்ம ப்ரியாவோட கல்யாணமா அது மாசி 10ந்தேதி எனச் சொன்னால், நம்மிடம் 2011 நாட்காட்டி இருந்தால் ஆங்கில தேதியை தெரிந்து கொள்ளலாம் இல்லை புது நாட்காட்டி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டியதுதான்.  இதுவே ஒரு தேதி என்ன கிழமை எனக் கேட்டால் கணக்கில் மேதாவியாக இருப்பின் ஒரு காகிதமும் பேனாவும் போதும், அல்லது கணிப்பொறியின் உதவியுடன் துல்லியாமாக சொல்லிவிட முடியும்.  


http://www.prokerala.com/general/calendar/tamilcalendar.php
http://tamildailycalendar.com/tamil_daily_calendar.php


கணித சமன்பாடுகள் எதையுமே கணினியில் ஏற்றி வேலைகளை எளிமை படுத்த முடியும்.  ஜாதக கட்டத்தில் இருக்கும் கிரக நிலை முதல் வின்னில் செலுத்தும் செயற்கைகோள் வரை அனைத்தும் கணிதம்தான் என்பதை அறிவோம்.  இந்த வரிசையில் ஆங்கில தேதியிலிருந்து தமிழ் தேதியும், தமிழ் தேதியிலிருந்து ஆங்கில தேதியையும் கணக்கிடும் சூத்திரம் தெரிந்தால் எளிதாக கணினியிலும் ஏற்றி விடலாம்.   இணையத்தில் இப்பணியைச் செய்து முடிக்க சில இணையதளங்கள் உள்ளன. 


Comments

Popular posts from this blog

சாளுக்கியர்களின் பேரரசு

பாண்டியன் நெடுஞ்செழியன்

உடல் நோய்க்கான அறிகுறிகளும் அதன் நிவர்த்தியும்