கபாடபுரம் பாண்டிய மன்னர்கள் அமைத்த சொர்க்க பூமி


 

                           கபாடபுரம் பாண்டிய மன்னர்கள் அமைத்த சொர்க்க பூமி


இன்று தனித்தனி நாடுகளாக உள்ள  ஆஸ்திரேலியா, மடகாஸ்கர்,  தென்னாப்பிரிக்கா, இலங்கை,மற்றும்  கிழக்கில் உள்ள சில சிறு,  சிறு தீவுகளையெல்லாம்  இணைத்தவாறு இருந்த ஒரு பிரம்மாண்ட நிலப்பரப்பு தான் “குமரிக்கண்டம்.   ஏழுதெங்க நாடு, ஏழுமதுரை நாடு,  ஏழுமுன்பலை நாடு, ஏழுபின்பலை நாடு,   ஏழுகுன்ற நாடு, ஏழுகுனக்கரை நாடு,  ஏழுகுரும்பனை நாடு என   இந்நிலப்பரப்பில் நாற்பத்தொன்பது நாடுகள்  இருந்துள்ளன பறுளி, குமரி என்ற   இரண்டு மாபெரும் ஆறுகள் ஓடியுள்ளன!
குமரிக்கொடு, மணிமலை என   இரண்டு மலைகள் இருந்துள்ளன! தென்மதுரை,  கபாடபுரம், முத்தூர் என பிரம்மாண்டமான  மூன்று நகரங்கள் இருந்தன.  அதிலே கபாடபுரம் என்பது   பாண்டியர்களின்இடைச்சங்ககால தலைநகரம்  என்று கருதப்படும் நகரமாகும்.   இறையனார் அகப்பொருளில் பின்வரும்  குறிப்புகள் படி கபாடபுரத்தில் சங்கம்  அரங்கேறியதாக கூறப்படுகிறது.

குறிப்பு   இடைச்சங்கம்
சங்கம் இருந்த இடம்   கபாடபுரம்
சங்கம் நிலவிய ஆண்டுகள்   3700 (37 பெருக்கல் 100)
சங்கத்தில் இருந்த புலவர்கள்   அகத்தியனார், தொல்காப்பியனார்,
இருந்தையூர்க் கருங்கோழி மோசி,  வெள்ளூர்க் காப்பியன், சிறுபாண்டரங்கன்,
திரையன் மாறன், துவரைக் கோமான்,  கீரந்தை இத் தொடக்கத்தார்
புலவர்களின் எண்ணிக்கை  3700
பாடிய புலவர்களின் எண்ணிக்கை  59
பாடப்பட்ட நூல்கள்   கலி, குருகு, வெண்டாளி,  வியாழமாரை அகவல் இத்தொடக்கத்தன  சங்கம் பேணிய அரசர்கள் வெண்டேர்ச் செழியன் முதல்
முடத்திரு மாறன் வரை(சாளரம்.கொம்)சங்கம் பேணிய அரசர்களின் எண்ணிக்கை 59
கவியரங்கு ஏறிய புலவர் எண்ணிக்கை  5
அவர்கள் பயன்படுத்திய இலக்கண நூல் 
அகத்தியம், தொல்காப்பியம், மாபுராணம்,
இசைநுணுக்கம், பூதபுராணம்
கபாடபுரம் இரந்ததற்கான சான்றுகள்   ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பாண்டிய மன்னர்களின்இரண்டாம் தமிழ்ச்சங்கம்  செயல்பட்ட கபாடபுரம் என்ற தமிழூர் திருச்செந்தூர் ஆகும்.   கபாடம் என்றால் முத்து.உலகம் போற்றிய  ஒளிவிடும் முத்து விளைந்த பகுதியாக  திருச்செந்தூரின் கடற்பகுதி முன்னாளில்  விளங்கியது.   ( சாளரம்.கொம் )  இராமாயணத்தில் கபாடபுரம் சீதையை நோக்கி தென்திசையை  தேடிச்சேல்லும் வானரப்படைப்பிரிவிடம்  சுக்கிரீவன் பின்வருமாறு கூறுகிறான்.

" நீங்கள் தென்திசை நோக்கிச் செல்லும்
போது தங்கம், முத்து, ஆபரணங்களால்
அலங்கரிக்கப்பட்ட மதில்களை கொண்ட
ஒரு நகரத்தை காண்பீர்கள் அந்த
பேரரசான பாண்டியனின்
கபாடபுரத்திலும் சீதையை தேடிப்பாருங்கள்!!"


—இராமாயணம், கிசுகிந்தாகாண்டம்
(4.41.18)
கபாடபுரம் பற்றி வால்மீகி தான் இயற்றிய இராமாயணத்தில் கிட்கிந்தா காண்டத்தில்
இலங்கை நோக்கிச்செல்ல இருந்த அனுமனுக்கு சில அறிவுரைகளைக் கூறும் போது,

‘ததோ ஹேமமயம் திவ்யம்
முக்தாமணி விபூஸ்யதம்
முக்தா கபாடம் பாண்ட்யானாம்
கதா திருக்யசவானரா’
என்று கூறுகிறார்.
‘தமிழ் நாட்டில் தென்பாண்டி நாடான மதுரையைக் கடந்து நீ  செல்லும்போது முத்லில் ஒரு ஊர் வரும்.அங்கு நீ இறங்கி விடாதே.இறங்கி விட்டால் அந்த ஊரை விட்டு நீ இலங்கைசெல்ல உன் மனம் விரும்பாது.ஏனெனில் அங்குள்ள நாகரீகமும்;பண்பாடும் உன்னை இழுக்கும்  எனவே அங்குநிற்காமல்  தொடர்ந்து போ அதற்கு அடுத்தாற்போல  இலங்கைவரும்’
இராமாயணக் காலத்தில் கபாடபுரம் இருந்தது என்பதும் உறுதியாகிறது. ( சாளரம்.கொம் )  முதலில் தமிழ்ச்சங்கம் குமரி நாட்டில் தென் மதுரையில்செயல்பட்டது.கடல் கோளினால் [சுனாமி]  குமரி நாடு அழியவேவடதிசை நோக்கிக் குடி பெயர்ந்தனர்  குமரியாற்றிக்கும்   தாமிரபரணிக்குமிடையே உள்ள கபாடபுரத்தைத் தலைநகராகக் கொண்டு இரண்டாம் தழிழ்ச்சங்கம் நிறுவப்பட்டது.பாண்டிய மன்னருள் அப்பேறு பெற்றவன் வெண்தேர்ச்செழியன் ஆவான்.அவனைத் தொடர்ந்து 59 பாண்டியமன்னர்கள் ஆண்டனர்.அந்நாளிலும் கடல் கோள்[சுனாமி]ஏற்படவே, கடைசி அரசனான முடத்திருமாறபாண்டியன் தப்பிப் பிழைத்து தற்போதுள்ள மதுரையைத் தலைநகராகக் கொண்டு கடைச்சங்கத்தைத் தோற்றுவித்தான்.  இஃது  thaமிழறிஞர்களின்கூற்று ஆகும்.
( சாளரம்.கொம் )
இரண்டாம் தமழ்ச்சங்கத்தின் காலம்  கி.மு.6804 முதல்கி.மு.3105 வரை ஆகும்.3700 ஆண்டுகள் கபாடபுரம்  பொருணை[தாமிரபரணி]ஆற்றின் முகத்துவாரத்தில் [அலைவாய்] இருந்தது.இச்சங்கத்தில் அகத்தியர்,குன்றம்  எறிந்தகுமரவேள்[முருகன்]ஆகியோர் புலவர்களாக இருந்தனர்.73 புலவர்கள்  கவி பாடி அரங்கேற்றினர்.கபாடபுரம் என்றபெயர் காலவெள்ளத்தில்  வழக்கொழிந்து போனது. திருச்செந்தூரில்  காண்ப்படும் கல்வெட்டொன்று,‘திரிபுவன  மாதேவி சதுர்வேதி மங்கலம்’ என்று  iவ்வூரைக்குறிப்பிடுகிறது.  இப்பெயரும் வழக்கொழிந்து போயிற்று.சதுர் வேதம் என்றால் நான்கு வேதங்களாகும். நான்கு வேதங்களும் இடையறாது ஒலிக்கும் ஊர் என்றும்,  அவ்வேதங்களை ஓதும் அந்தணர்களுக்கு [வேதியர்களுக்கு] தானமாகக் கொடுக்கப் பெற்ற ஊர் என்றும்  பொருள்படும். வேதியர்களான திரிசுதந்திரர்கள் 2000 மக்கள் திருச்செந்தூரிலிருந்து முருகனுக்குத் தொண்டுசெய்து வந்தனர்.இன்றும் avவர்களது வாரிசுகள் உள்ளனர்.




Comments

Popular posts from this blog

பாண்டியன் நெடுஞ்செழியன்

சாளுக்கியர்களின் பேரரசு

குமரிக்கண்டம்