கலாம் அவர்கள், குடியரசுத் தலைவராக இருந்த போது, ஐரோப்பிய கூட்டமைப்பின் பாராளுமன்றத்தில், அவர்களது, பொன்விழாவை ஒட்டி ஒரு சிறப்பு உரை ஆற்றினார். அந்த சமயம், "யாதும் ஊரே' யாவரும் கேளிர்" என்கிற பாடலை கூறி அதன் விளக்கத்தையும், ஆங்கிலத்தில் கூறி, தமிழின் பெருமையை உலகறிய செய்தார். அதை கேட்ட அனைவரும் எழுந்து நின்று கை தட்டி வாழ்த்தினர். அந்த கூட்டத்திற்கு தலைமை வகித்தவர், கலாம் அவர்களை கட்டி தழுவி பாராட்டினார்.
அந்த நிகழ்ச்சியை, திரு தனபால் தயாரித்த "லிட்டில் டிரீம்" என்கிற கலாம் அவர்கள் பற்றிய குறும்படத்திலிருந்து, கீழே கொடுத்துள்ளேன்.
"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை" என்கிற் கண்ணதாசன் வரிகள் தான் என் நினைவுக்கு வருகிறது.
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் நெடுஞ்செழியன் சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த பாண்டிய மன்னனாவான். தனது தந்தையின் இறப்பிற்குப் பின்னர், சிறு வயதிலேயே முடிசூட்டப்பட்ட இவன், தான் செய்த தலையாலங்கானத்துப் போரினால் சிறப்படைந்தவன். இவன் போருக்குச் செல்லும் போது, சிறுவர்கள் அணியும் ஐம்படைத் தாலியைத் தன் காலில் இருந்து கழட்டவில்லை என்பதை வைத்து இவன் மிகச்சிறு வயதிலேயே போருக்குச் சென்றான் எனலாம். காலம்: பொதுவாக சங்ககால வேந்தர்களின் காலக்கணிப்புகளில் பல கருத்து வேறுபாடுகள் காணப்படினும் இம்மன்னனின் காலத்தை அறிஞர்கள் இரண்டு வகையாக கணிக்கின்றனர். ஒன்று இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் தம்பியான வெற்றிவேற் செழியன் மகன் என்பது ஒரு கருத்து. மற்றொன்று இவன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்பவனுக்கு முன்னோன் என்ற கருத்து. இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக "இளைய ராயினும் பகையரசு கடியுஞ் செருமாண் தென்னர் குலமுத லாகலின்" என்ற ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியனைப் புகழும் சிலம்பின் வரியை எடுத்துக்காட்டி இளமையிலேயே பகைவரை பொருது வென்ற பாண்டிய மன்னன் தல...
சாளுக்கியர்களின் பேரரசு இராஷ்டிரகூடர் இராஷ்டிரகூடர் ( கன்னடம் ) கிபி 6 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட அரச மரபினர் ஆவர் . 7 ஆம் நூற்றாண்டில் கிடைத்த நிலக் கொடை குறித்த செம்பு தகடே அவர்களின் ஆட்சியில் நமக்கு கிடைத்த முதல் ஆவணமாகும் . இது மத்தியப்பிரதேசத்தின் மால்வா பகுதியில் உள்ள மான்பூர் என்னும் இடத்தில் கிடைத்தது . அச்சல்பூர் ( தற்கால மராட்டியத்தின் எலிச்சப்பூர் ) கனோஞ் அரசர் பற்றியும் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன . இராஷ்டிரகூடர்கள் எங்கிருந்து வந்தார்கள் அவர்கள் மொழி என்ன என்று பல சர்ச்சைகள் உள்ளது . எலிச்சப்பூர் அரசு பாதமியை தலைநகராகக் கொண்டு ஆண்ட சாளுக்கியர்களின் பாதுகாப்பில் இருந்த ஒன்றாகும் . அப்போது எலிச்சிப்பூரை ஆண்டது தந்திதுர்கா ஆவார் . அவர் சாளுக்கியன் இரண்டாம் கீர்த்திவர்மனை முறியடித்து தற்கால கர்நாடகவிலுள்ள குல்பர்கா பகுதியில் பேரரசை நிறுவினார் . அவரின் மரபில் வந்தவர்கள் மன்யக்கேடா இராஷ்டிரகூடர்கள் எனப்பட்டனர் . தென் இந்தியாவில் சக்திமிக்க அரசாக கிபி 753 இல் உருவாகினர் . அதே சமயத்தில் வங்காளத்தின் பாலப் பேரரசும் மால்வாவின் பிரதிதாரா பேரரச...
குமரிக்கண்டம் (லெமூரியா) குமரிக்கண்டம் என்பது முற்காலத்தில் இருந்ததாகக் கருதப்படும், கோட்பாடுகளால் ஊகிக்கப்படும் அல்லது இலக்கியங்களில் கற்பனையாகவோ சாட்சியாகவோ கூறப்படும் கண்டம் அல்லது பெருநிலப்பரப்பாகும். குமரிக்கண்டம் எனும் கண்டம் போன்ற பெரும் நிலப்பகுதியானது இன்றுள்ள இந்தியாவின் எல்லையான குமரி முனைக்குத் தெற்கே முற்காலத்தில் பாண்டியர்களின் ஆட்சிக்கு கீழ் அமைந்திருந்தது எனக் கருதுவதற்கு இடம் தரும் வகையில் பண்டைத் தமிழ் இலக்கிய நூற்களில் சில தகவல்கள் உண்டு. தேவநேயப் பாவாணர் முதலானோர் இந்த குமரிக்கண்டத்தில்தான் மாந்தர்களும் தமிழர்களும் முதன்முதல் தோன்றினர் என எழுதியுள்ளனர்[1] ஆதி மனிதன் தோன்றியிருக்கக் கூடிய தென் குமரிக்கண்டம் கடல்கோளால் (சுனாமி போன்ற ஆழிப்பேரலைகளால்) அழிவிற்குட்பட்டது என்பது சில தமிழறிஞர்களின், அறிவியல் முறைப்படி நிறுவப்படாத, கருத்து. பண்டைத்தமிழ் இலக்கிய நூல்களில் கிடைக்கப்பெறும் தகவல்களில் சிலவற்றைக் கீழே காணலாம்: தென்னிந்தியா, மற்றும்ஆஸ்திரேலியா ஆகியவற்ற்றை இணைக்கும்இலெமூரியாக் கண்டம். மேரு மலைஇலங்கை வரை பரந்திருந்தது. மடகாஸ்காரில...
Comments