மயன்
மயன் மயன் என்பவர் குமரிக்கண்டத்தின் சடைச்சங்கத்தில் உள்ள சங்கப்பலகையை செய்த சிற்பி . இவரின் சங்கப்பலகையிலேயே அகத்தியம் , ஐந்திறம் போன்ற பழந்தமிழ் இலக்கிய நூல்கள் ஏற்றப்பட்டதாக கணபதி சுதபதி என்ற சிற்பியும் அவரை பின்பற்றுபவர்கள் எழுதிய புத்தகங்களிலும் உள்ளன . பொருளடக்கம் 1 மயன் வரலாறு 2 மயனும் தமிழ்சங்கமும் 3 கலைமூலன் 4 நூல் பதிவுகள் 5 மயனின் முக்கிய நூல்கள் 6 சிற்றம்பலச்சிற்பம் 7 மயனின் சீடர்கள் 8 மயன் முக்கோண விதிக் குறிப்புகள் 9 மேற்கோள்கள் 10 இவற்றையும் பார்க்க 11 உசாத்துணை 12 வெளி இணைப்புகள் மயன் வரலாறு மூலநூல் : பண்டைத்தடயம் மயன் குமரி நாட்டில் பிறந்தவர் . இவரது தாய் கருங்குழலியும் தந்தை திருமூலரும் ஆவர் . மயன் பிறந்தநாள் - தைத்திங்கள் பௌர்ணமி லக்னம் - மகரம் நட்சத்திரம் - பூசம் ராசி - கடகம் மயனும் தமிழ்சங்கமும் மயன் தமிழ்ச்சங்கத்தில் இருந்தவர் என்பதை செந்தமிழ் இயக்கங்கண்டேன் என்ற மயனின் பாடலை வைத்து அறியப்படுகிறது . மயன் சங்கப்பலகை செய்ததை அவைக்களப் பலகை கண்டு அருந்தமி...