சில்லி சிக்கன் ஃபிரை (chili chicken Fry)







தேவையான பொருட்கள்:
எலும்பில்லாத கோழி இறைச்சி : 1/2 கிலோ
மிளகாய்த்தூள் : 2 தே. கரண்டி (உங்கள் சுவைக்கேற்ப)சோளமாவு: 1 தே. கரண்டி
முட்டை : 1பச்சை மிளகாய்: 6 (உங்கள் தேவைக்கேற்ப)இஞ்சி : ஒரு சிறு துண்டு
டொமாடோ சாஸ்: 4 தே.கரண்டி
சோயா சாஸ் : 2 தே. கரண்டி
சில்லி சாஸ்: 1 தே.கரண்டி
மஞ்சள் தூள் : சிறிதளவு
உப்பு தேவையான அளவு
எண்ணை பொரிக்க, தாளிக்க வெண்ணை 2 தே. கரண்டி
அஜினமோட்டோ தேவையென்றால் 1/2 தே.கரண்டி
செய்முறை:
*கோழி இறைச்சியை சுத்தமாக்கி சிறு துண்டுகளாக்கி வைத்துக்கொள்ளவும்.
*ஒரு முட்டையுடன் ஒரு தே. கரண்டி சோளமாவை நன்றாகக் கலந்து இறைச்சியுடன் சேர்க்கவும் உடன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, ஒரு தே. கரண்டி சோயா சாஸ் ஆகியவற்றை கலந்து 1/2 மணி நேரம் ஊறவிடவும்.
*ஒரு வாணலியில் எண்ணை ஊற்றி ஊறின இறைச்சியை கொஞ்சம் கொஞ்சமாக பொரித்து எடுக்கவும்.
*பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறிக்கொள்ளவும். இஞ்சியை பொடிதாக நறுக்கி வைத்துக்கொள்ளவும்.
*ஒரு வாணலியில் வெண்ணை போட்டு அது காய்ந்ததும் இஞ்சி மற்றும் பச்சை



மிளகாயைப் போட்டு
வதக்கவும். நன்றாக வதங்கியதும் பொரித்து வைத்திருக்கும் இறைச்சியையும் சேர்த்து கிளறவும்.
* சிறிது நேரம் சென்றபின் ஒரு தே.கரண்டி சோயா சாஸ்,சில்லி சாஸ், 4 தே. கரண்டி டொமாடோ சாஸ் போட்டு கிளறிவிடவும்.
சில்லி சிக்கன் தயார்
குறிப்பு:
உங்களுக்கு விருப்பமானால் பச்சை மிளகாய்க்கு பதில் வரமிளகாய் போட்டுக்கொள்ளலாம்.
இஞ்சியை ஓரளவு சிறிதாக நறுக்கினால் போதும்.. உண்ணும்பொழுது அவ்வப்பொழுது சிக்கும் இஞ்சி துண்டுகளின் சுவை அலாதியாக இருக்கும்.
மிகவும் டிரையாக இருக்கவேண்டாமென்றால் பச்சை மிளகாய் வதக்கும் பொழுது சிறிது வெங்காயமும் சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.
உங்களுக்கு தேவையான அளவுக்கு காரத்தை சேர்க்குக.

Comments

Popular posts from this blog

சாளுக்கியர்களின் பேரரசு

பாண்டியன் நெடுஞ்செழியன்

உடல் நோய்க்கான அறிகுறிகளும் அதன் நிவர்த்தியும்