அசோகர் (The King Ashoka)
வரலாற்றின் கரும்புள்ளிகள் மறைக்கப் பட்ட உண்மைகள் - அசோகர் - வரலாறு என்பது எப்போதுமே கடந்த காலத்தின் முழு பிரதிபலிப்பாக மட்டுமே இருக்க வேண்டும் , அது மிகவும் சரியானதுமாகவும் , தெளிவாகவும் இருக்க வேண்டும் . ஆனால் பல வேலைகளில் அது எழுதுபவர்களின் திறமைக்கு ஏற்ப மாற்றி அமைக்கப்படுகிறது . அதற்க்கு மாபெரும் சான்று அசோகர் என்றால் யாராவது நம்புவீர்களா ? அசோகர் என்றால் நமக்கு என்னென்ன தெரியும் ? சிறிது ஞாபகப்படுத்துங்களேன் . அசோகர் என்றால் நம் நினைவிற்கு முதலில் வருவது கலிங்கப் போர் தான் . இந்தியாவின் மிகச்சிறந்த , பெரிய பேரரசர் . பிறகு அவர் தனது தமையனை போரில் வென்று பட்டம் சூட்டிக் கொண்டார் , கலிங்கப் போருக்குப் பிறகு அவர் போரினை துறந்து புத்த மதத்தைத் தழுவி அற வழியில் சென்றுவிட்டார் என்றே அனைத்து நூல்களும் கூறுகிறது . பிறகு அவர் மக்களுக்கு பயன்பட சாலைகள் அமைத்தார் , இருபுறங்களிலும் நிழல் தரும் மரங்கள் நட்டார் என்றே அனைத்து நூல்களும் கூறுகிறது , ஆனால் அசொகருக்கென்று ஒரு கரிய சரித்திரம் உள்ளது . அது திட்டமிட்...