Posts

Showing posts from February, 2015

சாளுக்கியர்களின் பேரரசு

Image
சாளுக்கியர்களின்  பேரரசு இராஷ்டிரகூடர் இராஷ்டிரகூடர் ( கன்னடம் ) கிபி 6 முதல் 10 ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட அரச மரபினர் ஆவர் . 7 ஆம் நூற்றாண்டில் கிடைத்த நிலக் கொடை குறித்த செம்பு தகடே அவர்களின் ஆட்சியில் நமக்கு கிடைத்த முதல் ஆவணமாகும் . இது மத்தியப்பிரதேசத்தின் மால்வா பகுதியில் உள்ள மான்பூர் என்னும் இடத்தில் கிடைத்தது . அச்சல்பூர் ( தற்கால மராட்டியத்தின் எலிச்சப்பூர் ) கனோஞ் அரசர் பற்றியும் கல்வெட்டுகள் கிடைத்துள்ளன . இராஷ்டிரகூடர்கள் எங்கிருந்து வந்தார்கள் அவர்கள் மொழி என்ன என்று பல சர்ச்சைகள் உள்ளது . எலிச்சப்பூர் அரசு பாதமியை தலைநகராகக் கொண்டு ஆண்ட சாளுக்கியர்களின் பாதுகாப்பில் இருந்த ஒன்றாகும் . அப்போது எலிச்சிப்பூரை ஆண்டது தந்திதுர்கா ஆவார் . அவர் சாளுக்கியன் இரண்டாம் கீர்த்திவர்மனை முறியடித்து தற்கால கர்நாடகவிலுள்ள குல்பர்கா பகுதியில் பேரரசை நிறுவினார் . அவரின் மரபில் வந்தவர்கள் மன்யக்கேடா இராஷ்டிரகூடர்கள் எனப்பட்டனர் . தென் இந்தியாவில் சக்திமிக்க அரசாக கிபி 753 இல் உருவாகினர் . அதே சமயத்தில் வங்காளத்தின் பாலப் பேரரசும் மால்வாவின் பிரதிதாரா பேரரச...

பேரறிஞர் அண்ணா

Image
பேரறிஞர் அண்ணா தமிழக மக்களால் ‘தென்னாட்டு பெர்னாட்ஷா’ என்று அன்பொழுக போற்றப்படும் பேரறிஞர் அண்ணாவின் 46- வது நினைவு தினம்  இன்று . தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காஞ்சீபுரத்தில் , மத்தியத் தர நெசவுத் தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்த நடராசன் - பங்காரு அம்மையார் தம்பதியரின் அன்பு மகனாக 15-09-1909 அன்று பிறந்த தமிழ்நாட்டின் தலைமகனுக்கு பெற்றோர் இட்ட பெயர் அண்ணாதுரை என்பதாகும் .   காஞ்சீபுரம் நடராசன் அண்ணாதுரை என்ற முழுப்பெயரின் சுருக்கமாக சி . என் . அண்ணாதுரை என்று அறியப்பட்ட அவர் , ஆரம்ப கல்வியை சென்னை பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியிலும் , பட்டப்படிப்பை பச்சையப்பன் கல்லூரியிலும் பயின்றார் . தமக்கையார் ராசாமணி அம்மையாரின் அரவணைப்பில் வளர்ந்த அண்ணா , மாணவப் பருவத்திலேயே ராணியம்மையாரை மணம் புரிந்தார் . கொஞ்சம் படித்துவிட்டால் ஆங்கிலத்தில்தான் பேசவேண்டும் , அதிலும் கல்லூரியில் படித்துவிட்டால் ஆங்கிலத்தை தவிர்த்து பிறமொழிகளில் பேசக்கூடாது என்ற ஆங்கில மோக மனப்பான்மை அன்றைய காலகட்டத்திலும் அதிகம் இருந்தது . ஆங்கிலத்தில் பேசு...