தேசபக்தன் டிராகுலா (Dracula).... டிராகுலா (Dracula) என்றாலே ஆங்கில பேய்ப்பட ரசிகர்கள் அனைவரும் அஞ்சி நடுங்குவார்கள் . தமிழில் ரத்த காட்டேரி என்றும் பிற்கால ஐரோப்பாவில் வேம்பயர் (vampire) என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கபட்ட இந்த டிராகுலாவின் வரலாறு என்ன ? அந்த வரலாற்றை ஆராய்ந்தால் டிராகுலா நாம் நினைப்பது போல் ரத்தவெறியன் இல்லை என்பதும் அவனது கொடூரங்களுக்கு ஒரு காரணம் இருந்திருப்பதும் தெரியவருகிறது . அதனால் டிராகுலாவின் வரலாற்றையும் சற்று ஆராய்வோம் . ஹங்கேரி நாட்டில் 1431 ம் ஆண்டு வலேசியா (wallachia) எனும் சிறுநாட்டின் மன்னர் வம்சத்தில் பிறந்தவன் விளாட் டிராகுல் . இவனே பிற்காலத்தில் விளாட் தெ இம்பேலர் ( கழுவேற்றும் விளாட் - Vlad the Impaler), கவுண்ட் டிராகுலா (Count Dracula) என்ற பெயரில் புகழ்பெற்றவன் . அன்று கிழக்கு ஐரோப்பா எதிர்கொண்ட மிக முக்கிய சக்தி ஆட்டோமான் (Ottomon Turks) துருக்கிய சாம்ராஜ்யம் . டிராகுலாவின் தந்தை துருக்கிய சுல்தானுக்கு கப்பம் கட்டி வந்தார் . ஒருதரம் கப்ப பணம் கட்ட தாமதமாக தன் இரு பிள்ளைகளான வ்ளாட் மற்றும் ...
Posts
Showing posts from November, 2014