உடல் நோய்க்கான அறிகுறிகளும் அதன் நிவர்த்தியும்
உடல் நோய்க்கான அறிகுறிகளும் அதன் நிவர்த்தியும் கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி ? சிறுநீரகங்கள் மோசமாக இருப்பதைக் குறிக்கிறது . சிறுநீரகங்கள் உடலில் இருக்கும் கழிவுப் பொருட்களை qற்றும் வேலையைச் செய்பவை . அவை சரிவர வேலை செய்யவில்லை என்றால் , உடலில் சேரும் அசுத்த நீர் வெளியேற முடியாமல் போகும் . இவை கண்களைச் சுற்றித் தேங்கி விடுவதால் கண்களைச் சுற்றி வீக்கம் போலத் தோன்றும் . டிப்ஸ் : உணவில் சேர்த்துக் கொள்ளப்படும் உப்பின் அளவைக் குறைத்துக் கொள்ளவேண்டும் . மேலும் அதிகப்படியான நீர் அருந்துவது சிறுநீரகங்கள் சரியாக வேலை செய்ய உதவும் . கண் இமைகளில் வலி .. என்ன வியாதி ? அதிகப்படியான வேலை காரணமாக இந்த வலி வரலாம் . மேலும் மக்னீசியம் உடலில் குறைவதால் உடல் சோர்வடைந்து கண் இமைகளில் வலி உண்டாகிறது . டிப்ஸ் : போதுமான அளவு ஓய்வு எடுத்துக் கொள்ளவேண்டும் . அதோடு உணவில் முட்டைக்கோஸ் மற்றும் கீரைகளை அதிக அளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் . கண்களில் தெரியும் அதிகப்படியான வெளிச்சம் என்ன வியாதி ? அதிகமாக வேலை செய்து கொண்டே இருப்பது . இந்த ஸ...