மனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா?
மனித உடம்பில் இவ்வளவு விஷயங்களா ? 1. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடலில் மொத்தம் 206 எலும்புகள் உள்ளன . ஆனால் அவன் குழந்தையாக இருக்கும் போது அவனுடைய உடலில் 300 எலும்புகள் இருக்கும் அவன் வளர வளர அவற்றில் 94 எலும்புகள் மற்ற எலும்புகளுடன் இணைந்து விடுகிறது . 2. நாம் 6 விநாடிக்கு ஒரு முறை கண்களை இமைக்கிறோம் . சாதாரணமாக வாழ்நாளில் சுமார் 25 கோடி முறைகள் கண்களை இமைக்கிறோம் . 3. நமக்கு இரண்டு கால்கள் , இரண்டு கண்கள் , இரண்டு காதுகள் , இரண்டு கைகள் இவைகள் ஒரே அளவாக இருப்பதில்லை காரணம்கருவில் சிசு வளரும் போது அதன் உறுப்புகள் ஒரே சீராக வளர்வதில்லை . இந்த மிகச் சிறிய வத்தியாசம் தான் நம்மை அழகுபடுத்திக் காட்டுகிறது . நம் இடது கால் செருப்பை விட வலதுகாலின் செருப்பு வேகமாக தேய்வது கூட இந்த சிறு வித்தியாசத்தால் தான் . 4. மனிதன் இறந்தபின் அவனது ஜீரண உறுப்புகள் தொடர்ந்து 24 மணி நேரம் வரை செயல்படுகிறது . அவனது எலும்பு தொடர்ந்து 4 நாட...