Posts

Showing posts from March, 2014

திருமண முறைகள்

தமிழ் திருமண முறைகள்... இக்காலத்தில் இடம்பெறும் திருமணங்கள் தமிழ் முறைப்படியும் இல்லாமல் வைதீக முறைப்படியும் இல்லாமல் இரண்டும் கலந்து நடைபெறுகின்றன. திருமணத்தின் போது செய்யப்படும் சடங்குகள் எல்லாம் அறிந்து செய்வதில்லை, இயந்திரம்போல் முன்னுக்கு பின் முரண்பாடாக செய்து வருகிறார்கள். எனவே தமிழ்த்திருமண முறைகள் கீழே ஒழுங்காக தொகுத்து தரப்பட்டுள்ளன. திருமண உறுதி / நிச்சயதார்த்தம்: திருமண உறுதி சடங்கை நிச்சயதார்த்தம் என்று வட மொழியில் சொல்வர். காலப்போக்கில் நிச்சயதார்த்தம் என்ற சொல்லே நிலைத்து விட்டது. மணமக்களை சார்ந்த இரு வீட்டாரும் சான்றோர்களையும்,சுற்றத்தார்களையு ம் அவையில் கூட்டி மணநாள் குறித்து ஒப்புதல் செய்து திருமணத்தை உறுதி செய்வதாகும். சடங்கு முறைகள் : அவையில் சான்றோர்களுடன் மணமக்களை சார்ந்த பெற்றோர்கள் அமர்ந்து இருவரும் ஒருவருக்கொருவர் மாலையிட்டு சந்தானம், பன்னீர் கொண்டு நலுங்கு செய்து கொள்ள வேண்டும். இரு தட்டில் வெற்றிலை பாக்கு பழம், மஞ்சள் வைத்து அதில் திருமண உறுதிப்பத்திரத்தை எழுதி கையொப்ப ம் இட்டு வைக்க, சான்றோர் (இரு நகல்கள்) ச...