Posts

Showing posts from June, 2012

ரிலாக்ஸ் ப்ளீஸ்!

Image
தொ ண்டையில் நிற்கிறது வரமோட்டேன் என்கிறது’; ‘இவரை எங்கேயோ பார்த்திருக்கிறேன், எங்கேன்னு ஞாபகம் வரலை’ என்று மூளையைக் கசக்கிக் கொள்வோம் தெரியுமா? அப்படிச் சிரமப்படும்போதோ, ஒரு பிரச்சினையை, சிக்கலை, வேலையை, முடித்தே தீரவேண்டும் என்று பதறும்போதோ அது நடைபெறாமல் மேலும் சிக்கலாகி, எரிச்சல் அதிகமாகி, கோபம், ஆத்திரம், மகிழ்வு இழத்தல்.. இத்தியாதி.....!   சிக்கலான நேரங்களில் அந்தப் பிரச்சினையை ஒத்திவைத்து, அதன் போக்கிற்கு விட்டுவிட்டு நாம் ரிலாக்ஸ்டாக இருந்தால் போதும்; எங்கிருந்தோ திடீரென ஒரு பொறி பறந்து வந்து ஒரு விடை தரும்; நம் பிரச்சினைக்குத் தீர்வு தென்படும். குளியலறை, கழிவறை, படுக்கையறை போன்ற இடங்களில் நாம் இயல்பாய் நம் இறுக்கம் தளர்த்தியுள்ள தருணங்களில் அவை நடைபெறும் என்று உளவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். கழிவறையில் மலச்சிக்கல் இல்லாமல் இருக்கும்போது புது ஐடியாக்கள் சாத்தியம் என்றுதான் தோன்றுகிறது. அப்பொழுது மறவாமல் செல்ஃபோனையும் வெளியே விட்டுவிட்டுச் செல்ல வேண்டும். அறிவியல் ரீதியாய் இதற்கு விளக்கம் சொல்கிறார்கள். நாம் ‘அப்பாடா’ என்று ரிலாக்ஸ்டாக இருக்கும்ப...

ஏன் நாம் வளர்ந்து மூப்பு எய்துகிறோம்?

Image
நாம் ஏன் வளர்ந்து மூப்பு எய்துகிறோம் என்பதனை விளக்குவதற்கு அறிவியலார்கள் மூன்று முக்கிய கொள்கைகளைப் படிப்படியாக உருவாக்கியுள்ளனர். உயிர்மங்களின் இழப்பு அல்லது மாற்றிவைக்க இயலாத பகுதிகளின் இழப்பு முதற் காரணமாகும். மூளை உயிர்மங்கள் ஆயிரக்கணக்கான நூற்றுத் தொகுதிகள் ஐயத்திற்கிட மின்றிச் செத்துவிடுகின்றன. மனித வாழ்வில் குழந்தைப் பருவத்திற்குப் பிறகு இந்த உயிர்மங்கள் மீண்டும் உற்பத்தி செய்யப்பட முடியாது. ஆயினும் இது முழுமையான விளக்கம் ஆகாது. ஏனெனில் மூளையிலும் உடலிலும் பெருமிழப் புற்ற மனிதர்கள் மூப்புத் தன்மையைக் கட்டாயமாக அடையாமலும் இருக்கின்றனர். மேலும் விலங்குகள் அதே வேகத்தில் உயிர்மங் களின் அழிவால் துன்புறினும் மூப்பெய்தும் வயது விகிதம் முழுவதும் வேறுபட்டுக் காணப்படுகிறது. புது உயிர்மம் தோன்றல் அல்லது மாற்றம் பெறுதல், இரண்டாம் காரணமாம். பகுக்கும் உயிர்மம் எப்போதும் சரியாகவே பகுக்கும் எனக் கூறுவதற்கில்லை. இயற்கையான கதிர்களின் (natural radiation) பரவுதலால் எல்லா வகையான பிழைகளும் படரத் தொடங்கலாம். சில சமயங் களில் தோன்றிய உயிர்மங்கள் துன்பமாய் அமையலாம். நாளமில்லாச் சுரப...

வாஸ்கோடாகாமா

Image
   Vasco Da Gama.. 1498 மே மாதம் 20ஆம் தேதி அந்த வெள்ளிக்கிழமை இரவு அரபிக்கடல் வழியே கப்பலில் பொர்ச்சுகீசிய மாலுமி வாஸ்கோடகாமா கேரளாவில் உள்ள கொழிக்கோடு வந்து சேர்ந்தான். இந்தியாவின் அளப்பரிய செல்வம் கேள்விப்பட்டு ஐரோப்பியர் இந்தியாவோடு வியாபாரம் செய்யத்துடித்த காலமது. இங்கு தங்கமும், வாசனைத் திரவியங்களும் மிகுந்திருப்பதாய் கேள்விப்பட்டு கொலம்பஸ் கடல் வழியே 1492 -ல் இந்தியாவிற்குப் பதிலாக மேற்கு இந்தியத் தீவுகளையும் அமெரிக்காவையும் கண்டறிந்த சம்பவத்திற்கு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு இது நடந்தது. வாஸ்கோடகாமாவோடு கப்பலில் பயணம் செய்த குழுவில் ஒருவன் எழுதி வைத்த டயரிக்குறிப்பில் அந்தப் பயணத்தின் அதிர்ஷ்டம் குறித்து எழுதப்பட்டிருக்கிறது. பயணம் செய்த குழு தரை இறங்கி விடாரித்துவிட்டு படகில் கப்பலுக்குத் திரும்பியபோது கொண்டு விட வந்த கோழிக்கோட்டுக்காரன் “அதிஷ்டமான பயணம்! மகா அதிஷ்டமான பயணம்! வைரமும் வைடூரியமுமாய் இருக்கின்றன. இந்த வளமான பூமிக்குக் கொண்டு வந்து சேர்த்ததற்கு தாங்கள் கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்.: என போர்ச்சுக்கீசிய மொழியிலேயே பேசியது கண்டு பிரமிப்பு ...