கணிணியில் இயங்கும் மென்பொருள்களை யாரும் பார்க்காமல் மறைக்க

கணிணியை பொதுவான இடங்களில் பயன்படுத்தும் பலரும் சந்திக்கின்ற பிரச்சினை , நாம் திறந்து வைத்திருக்கும் மென்பொருள்களை யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயம் வருவது தான் . அலுவலகத்தில் பெரும்பாலானோர்க்கு இந்த பயம் இருக்கும் . ஏனெனில் வேலைகளுக்கிடையே நம்மவர்கள் பதிவு எழுதுவது , டுவிட்டர் பயன்படுத்துவது , வீடியோ பார்ப்பது போன்ற வேறு செயல்களைச் செய்வது வழக்கமான ஒன்று . திடிரென்று மேனேஜர் அல்லது வேறு ஆட்கள் வந்து விட்டால் அப்படியே அந்த புரோகிராம்களை சாத்தி மூடுவதைத் தவிர வேறு வழியில்லை . அதனால் இணையத்தில் நாம் செய்து கொண்டிருந்த வேலையும் அப்படியே போய் விடும் . யாராவது வரும் போது சட்டென்று தேவையில்லாத மென்பொருள்களை மறைத்து வைத்து விட்டால் அவர்கள் சென்ற பின்னர் மறுபடியும் திறந்து கொள்கிற மாதிரி வசதியுடைய மென்பொருள்கள் இரண்டைப் பார்ப்போம் . இந்த மென்பொருள்களை நாம் சிறிது நேரம் வெளியே செல்லும் போதும் போட்டு விட்டுச் செல்ல்லாம் . எந்த மென்பொருளும் யார் கண்களுக்கும் புலப்படாதிருக்கும் ; Task Bar இல் கூட உட்கார்ந்திருக்காது . அதே போல சிலர் புத்திசாலியாய் ALT+TAB பட்டன்களை அழுத்துவதன் மூலம் தற்போ...